உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாடு திருடிய இருவர் கைது

மாடு திருடிய இருவர் கைது

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே கீவளூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 31. இவர், சொந்தமாக எட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 8ம் தேதி மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள், மாலை வீடு திரும்பிய போது, இரண்டு மாடுகள் காணாமல் போனது தெரிந்தது.வெங்கடேசன் ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி விசாரித்த போலீசார், இரண்டு மாடுகளை பிடித்து 'டாடா ஏஸ்' வாகனத்தில் ஏற்றி சென்ற, ராணிப்பேட்டை மாவட்டம், சாயனபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி, 40, பரந்தாமன், 49, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !