உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பைக்குகள் மீது லாரி மோதல் இருவர் பலி, இருவர் காயம்

பைக்குகள் மீது லாரி மோதல் இருவர் பலி, இருவர் காயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் உயிரிழந்தனர். உத்திரமேரூர் அடுத்த, சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ், 21; வையாவூர் இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். இவர், நண்பர்கள் கைலாசநாதர் கோவில் தெருவைச் சேர்ந்த நிர்மல், 19; பாண்டவ துாதப் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சந்தோஷ், 21; ஆகிய மூவரும் நேற்று முன் தினம் இரவு 11:15 மணி அளவில், 'டிவிஎஸ் ஸ்போட்ஸ்' இருசக்கர வாகனத்தில் வையாவூரில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி சென்றனர். ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் 'ஹெல்மெட்' அணியாமல் சென்றனர். ஹரிஷ் இருசக்கர வாகனத்தை ஓட்டினார். அதே வழித்தடத்தில், 'ராயல் என்பீல்டு புல்லட்' இருசக்கர வாகனத்தில், 'ஹெல்மெட்' அணியாமல் வையாவூர் குமரன் நகரைச் சேர்ந்த வெங்கடேசன், 31. என்பவர் சென்றுக் கொண்டிந்தார். அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து, வையாவூர் நோக்கி சென்ற லாரி, இரண்டு இருசக்கர வாகனங்கள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில், நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே ஹரிஷ் உயிரிழந்தார். காயமடைந்த நிர்மல், சந்தோஷ், வெங்கடேசன் ஆகியோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். இதில், நிர்மல் நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி மற்றும் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ