விநாயகர் சிலைகள் கரைக்க இரண்டு இடங்கள் தேர்வு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு, இரு இடங்களில் மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை இம்மாதம் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை ஹிந்து அமைப்புகள் மேற்கொள்ளும் நிலையில், அரசு அதிகாரிகள், விநாயகர் சிலைகளை எங்கு கரைப்பது என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொது இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ஏரியிலும், சர்வதீர்த்த குளம் என, இரு இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.