உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் டூ - வீலர்கள் நிறுத்தம்

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் டூ - வீலர்கள் நிறுத்தம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், வைகுண்ட பெருமாள் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில், தினமும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த தெருவின் வழியாக அப்பகுதியினர், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு செல்கின்றனர். இந்த தெருவில் எப்போதும், வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படுவது வழக்கம்.இந்நிலையில், வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருகின்றன.இதனால், அவ்வழியே செல்லும் ஆட்டோ, கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது.போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், தொடர்ந்து வாகனங்கள் நிறுத்துவது வாடிக்கையாக உள்ளது.எனவே, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி