உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாதாள சாக்கடை அமைக்கும் பணி திருக்காலிமேடில் துவக்கம்

பாதாள சாக்கடை அமைக்கும் பணி திருக்காலிமேடில் துவக்கம்

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் கடந்த 1975ம் ஆண்டு, நகராட்சியாக இருந்தபோது, 40 வார்டுகளுக்கு மட்டும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது செவிலிமேடு பேரூராட்சி மற்றும் ஓரிக்கை, நத்தப்பேட்டை ஊராட்சி ஆகியவை, காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, மாநகாட்சியின் எல்லை விரிவடைந்துள்ளதால், வார்டு எண்ணிக்கை 51ஆக உயர்த்தப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைந்த பகுதியில், பாதாள சாக்கடை வசதி இல்லாததால், 350 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டன பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.இதில், முதற்கட்டமாக செவிலிமேடு, ஓரிக்கை பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணி நடந்தது. தற்போது, திருக்காலிமேடு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.இதில், முதற்கட்டமாக, பொக்லைன் இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டப்பட்டு, ‛மேன்ஹோல் கான்கிரீட் தொட்டி' அமைக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து பைபர் பைப் லைன் அமைக்கப்படும் என, மாநகாட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை