மேலும் செய்திகள்
மின் விளக்கின்றி ஏரிக்கரை சாலை
04-Mar-2025
மதுரமங்கலம்,:மதுரமங்கலம் அடுத்த, செல்லம்பட்டிடை கிராமத்தில் இருந்து, நரசிங்கபுரம் கிராமம் வழியாக, பேரம்பாக்கம் செல்லும் பிரதான சாலை உள்ளது.இந்த சாலை வழியாக, செல்லம்பட்டிடை, குணகரம்பாக்கம், மதுரமங்கலம், ஏகனாபுரம், கண்ணன்தாங்கல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தோர், நரசிங்கபுரம் வழியாக பேரம்பாக்கம், மப்பேடு ஆகிய பகுதிக்கு சென்று வருகின்றனர்.அதேபோல, பேரம்பாக்கம், மப்பேடு, செல்லம்பட்டிடை, குணகரம்பாக்கம் ஆகிய கிராமத்தினர், மதுரமங்கலம் வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிக்கு சென்று வருகின்றனர்.செல்லம்பட்டிடை கிராமத்தில், சாலையோரம் தடுப்பு இன்றி பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தை, இரு ஆண்டுகளுக்கு முன் குளத்தை சுற்றிலும் கருங்கற்களை பதித்துள்ளனர். இதில், தடுப்பு வேலி இல்லை. மேலும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் குளத்தில் விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால், குளத்தில் தண்ணீர் மாசு ஏற்படுவதோடு, செல்லம்பட்டிடை கிராமம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குளத்தில் நிலை தடுமாறி விழும் நிலை உள்ளது.எனவே, செல்லம்பட்டிடை கிராம குளத்திற்கு தடுப்பு ஏற்படுத்தவும் மற்றும் குளத்தில் விடப்படும் தண்ணீர் தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
04-Mar-2025