உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நீர்வரத்து கால்வாயில் குப்பை மொளச்சூரில் சுகாதார சீர்கேடு

நீர்வரத்து கால்வாயில் குப்பை மொளச்சூரில் சுகாதார சீர்கேடு

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மொளச்சூர் ஊராட்சியில், பள்ள மொளச்சூர் செல்லும் சாலையோரம் உள்ள மயானம் அருகே, கோதுமை குட்டை உள்ளது. மயானத்தில் ஈமச்டங்குகள் நடைபெறும் போது, இந்த குட்டையில் நீராடி செல்வது வழக்கம்.இந்த குட்டை தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குட்டை முழுதும் ஆகாய தாமரை மற்றும் செடிகள் சூழ்ந்து உள்ளது. இதனால், குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், அப்பகுதியில் உள்ள தனியார் வாடகை குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக நீர்வரத்து கால்வாயில் விடுகின்றனர்.இதனால், குட்டை நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. அதேபோல், பிளாஸ்டிக் குப்பைகளும் கால்வாயில் வீசி செல்கின்றனர். எனவே, நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுவதை தடுத்து, குட்டையை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி