உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆன்மிக புத்தக நிலையம் முறையாக திறக்க வலியுறுத்தல்

ஆன்மிக புத்தக நிலையம் முறையாக திறக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம், தமிழகத்தில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த 2022ம் ஆண்டு அக்., மாதம் ஆன்மிக புத்தக நிலையம் திறக்கப்பட்டது.ஆன்மிக புத்தக நிலையத்தில் அத்திகிரிபுத்தகம், ராமானுஜர் வரலாறு, பன்னிரு ஆழ்வார்கள், தமிழ்நாட்டு கோவில் கட்டடக்கலை, ஆகம விதிகள், தமிழக கோவில் கலை வரலாறு, பெரிய புராண கதைகள், சைவ சமய சிறப்பு நுால்கள், ராமாயணம், மகாபாரதம், ஹிந்து அறநிலையத்துறையின் திருக்கோவில் மாத இதழ் உள்ளிட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.இவற்றை பக்தர்கள் பார்வையிடுவதுடன், அத்தி வரதர் வைபவத்தையொட்டி வெளியிடப்பட்ட 'அத்திகிரி' என்ற புத்தகத்தை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இந்நிலையில், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆன்மிக புத்தக நிலையம் முறையாக திறக்காமல் எப்போதும் மூடியே கிடக்கிறது.இதனால், ஆன்மிக புத்தகம் வாங்க வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, ஆன்மிக புத்தக நிலையத்தை முறையாக திறக்க, ஹிந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ