உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் ஊராட்சியில், எம்.ஜி.ஆர்., நகர், புதிய காலனி, அகஸ்தியப்பா நகர், மேட்டூர், சேத்துபட்டு ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.இங்கு, 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, எம்.ஜி.ஆர்., நகரில் இருந்து புதிய காலனிக்கு செல்ல, 25 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட சுண்ணாம்பு கப்பிச்சாலை உள்ளது.இந்த சாலையை பயன்படுத்தி அப்பகுதியினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது, இச்சாலை முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது.இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பெயர்ந்து கிடக்கும் ஜல்லியில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை