நாய்க்கன்குப்பம் சாலையில் வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது நாய்க்கன்குப்பம் கிராமம். இந்த கிராம சாலையின் இருபுறமும் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இந்த சாலையின் இருபுறமும் இதுவரை வடிநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தாமல், சாலையோர சிறு அளவிலான கால்வாய் உள்ளது.இதனால், மழை நேரங்களில், இப்பகுதி சாலையில் வழிந்தோடும் தண்ணீர் முழுமையாக வெளியேற போதுமான கால்வாய் வசதி இல்லை.இதனால், அச்சமயங்களில் சாலையோர குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து அப்பகுதியினர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.மேலும், நாய்க்கன்குப்பம் சாலையோர சிறு அளவிலான கால்வாயில், தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.எனவே, நாய்க்கன்குப்பம் பிரதான சாலையின் இருபுறமும் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.