உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பராமரிப்பின்றி கிளக்காடி குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

பராமரிப்பின்றி கிளக்காடி குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:கிளக்காடி பொது குளம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.உத்திரமேரூர் ஒன்றியம், கிளக்காடியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, சாலவாக்கம் செல்லும் சாலையோரம் சுற்றுச்சுவர் இல்லாமல் பொது குளம் உள்ளது.இந்த குளம் அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது, இந்த குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்து பாசி படர்ந்து உள்ளன.இக்குளத்தின் தண்ணீரை அப்பகுதிவாசிகள் கால்நடைகளுக்கு குடிநீராக பயன்படுத்தி வந்தனர். தற்போது, அப்பகுதிவாசிகள் சிலர் குளத்தில் குப்பை கொட்டி வருகின்றனர்.இந்த குப்பையை அவ்வப்போது தீயிட்டு எரித்தும் வருகின்றனர். அதனால், குளத்து தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது.எனவே, பொது குளத்தை துார்வாரி சீரமைத்து, சுற்றுச்சுவர் அமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை