உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏகனாம்பேட்டை குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்

ஏகனாம்பேட்டை குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்:ஏகனாம்பேட்டையில், கோரை புற்கள் வளர்ந்துள்ள பொதுக்குளத்தை சீரமைக்க அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர். வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில் ஏகனாம்பேட்டை உள்ளது. இப்பகுதியில், சாலை ஓரத்தில் ஊராட்சிக்கு சொந்தமான பொதுக்குளம் உள்ளது. ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை கிராமத்திற்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த குளம் உள்ளது. மேலும், இக்குளத்தின் அருகே உள்ள சிவன் கோவில் மற்றும் அம்மன் கோவிலில் கடந்த ஆண்டுகளில் விழாவின்போது, இக்குளத்து நீரை பூஜைகளுக்கு பயன்படுத்துவது வழக்கத்தில் இருந்துள்ளது. கடந்த சில ஆண்டு களாக முறையான பராமரிப்பு இல்லாததால், இந்த குளம் துார்ந்து காணப்படுகிறது. குளம் முழுக்க கோரை புற்கள் வளர்ந்து உள்ளது. இதனால், இந்த குளம் பயன்பாடு இல்லாமல் வீணாகி வருகிறது. எனவே, ஏகனாம்பேட்டை பொதுக்குளத்தை துார்வாரி, வரத்து கால்வாயை சீரமைத்து பராமரிப்பு பணி மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை