மேலும் செய்திகள்
புதர்மண்டிய கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
06-Nov-2024
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம், வெள்ளகுளம் தெருவில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், இந்த கால்வாயில் மண் திட்டுகளால் அடைப்பு ஏற்பட்டு துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், கழிவுநீர் சாலையில் வெளியேறும் நிலையில் உள்ளது. மழைக்காலத்தில், மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் வழிந்தோடும் சூழல் உள்ளது.எனவே, மண் திட்டுகளால் துார்ந்த நிலையில் உள்ள கால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெள்ளகுளம் தெருவினர் வலியுறுத்தி உள்ளனர்.
06-Nov-2024