உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புழுதி பறக்கும் ஏரிக்கரை சாலை சீரமைக்க வலியுறுத்தல்

புழுதி பறக்கும் ஏரிக்கரை சாலை சீரமைக்க வலியுறுத்தல்

ஆற்பாக்கம்,:காஞ்சிபுரம் ஒன்றியம், ஆற்பாக்கம் ஏரிக்கரை சாலை வழியாக கட்டுமான பொருட்களுக்கு தேவையான எம்.சாண்ட், மணல், ஜல்லிகற்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.கனரக வாகனங்கள் அதிகளவு சென்று வருவதாலும், மழையின்போது ஏற்பட்ட மண் அரிப்பினாலும், ஜல்லி கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே மண் சாலையாக மாறியுள்ளதால், கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது.இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்வோரின் கண்களில் துாசு விழுவதால் விழுந்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, சேதமடைந்த நிலையில் உள்ள ஆற்பாக்கம் ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை