உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, பிள்ளையார்பாளையம் அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்கா அமைந்துள்ள சாலையில், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளன.மழை பெய்தால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, செடி, கொடிகள் வளர்ந்துள்ள மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ