உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புல் வளர்ந்த கோவில் குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

புல் வளர்ந்த கோவில் குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவில் குளத்திலும், நடைபாதையிலும் வளர்ந்துள்ள புல், செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவில் குளம், 2011ம் ஆண்டு, சுற்றுலா மாநில அரசு நிதி உதவி திட்டத்தின் கீழ் 18 லட்சம் ரூபாய் செலவில் குளம் துார்வாரப்பட்டு, குளத்தை சுற்றிலும் நடைபாதை, படிகள், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்திலும், நடைபாதையிலும், புல், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், குளத்தில் நீர்பிடிப்பு பகுதியும் குறைந்துள்ளது. எனவே, குமரகோட்டம் கோவில் குளத்தை துார்வாரவும், நடைபாதையில் வளர்ந்துள்ள செடி, கொடிகளையும் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ