உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கட்டவாக்கம் ஏரியை துார்வார வலியுறுத்தல்

கட்டவாக்கம் ஏரியை துார்வார வலியுறுத்தல்

வாலாஜாபாத்:கட்டவாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், கட்டவாக்கம் கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 160 ஏக்கர் ஏரி உள்ளது. பருவ மழைக்காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும். இந்நிலையில், கட்டவாக்கம் ஏரியை, பல ஆண்டுகளாக துார்வாராததால், ஏரியின் நீர்பிடிப்பு பகுதி துார்ந்து, கரையையொட்டி பல வகையான செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், மழைக்காலத்தில் ஏரியில் முழு கொள்ளளவிற்கான தண்ணீர் சேகரமாவதில்லை. எனவே, கட்டவாக்கம் ஏரியை துார்வாரி பராமரிக்க, சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ