மேலும் செய்திகள்
புத்தகரம் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
19-Apr-2025
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், தேவேரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது தோண்டாங்குளம் கிராமம். இக்கிராமத்தில், ஒன்றிய கட்டுப்பாட்டிலான தென்னந்தாங்கல் நீர் பிடிப்பு பகுதி உள்ளது.மழைக்காலத்தில், இந்த தாங்கல் நிரம்பினால் அந்த தண்ணீரைக் கொண்டு, சுற்றி உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.மேலும், தோண்டாங்குளம் விவசாய நிலங்களுக்கு இத்தாங்கல் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில்ல், இந்த தாங்கல் பகுதிக்கான வரத்து கால்வாய், சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்காமல் உள்ளது.இதனால், மழைக்காலங்களில் தாங்கல் பகுதிக்கு கால்வாய் வாயிலாக தண்ணீர் வந்தடைவதில் சிக்கல் உள்ளது.மேலும், பல ஆண்டுகளாக தாங்கல் நீர் பிடிப்பு பகுதி துார் வாராமல் உள்ளதால், மழைக்காலத்தில் தாங்கலில் குறைவான தண்ணீரே சேகரமாகிறது.இதன் காரணமாக கோடைக்காலத்தில் விரைவாக தண்ணீர் வறண்டு சாகுபடி பாதிக்கப்படுகிறது. மேலும், கோடையில் கால்நடைகளும் நீர் ஆதாரம் இல்லாமல் சிரமம் படும் நிலை ஏற்படுகிறது.எனவே, தோண்டாங்குளம், தென்னந்தாங்கல் நீர் பிடிப்பு பகுதியை துார்வாரி, நீர்வரத்து கால்வாய்களை சீர் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19-Apr-2025