கண்ணபிரான் கோவிலில் உறியடி திருவிழா
குன்றத்துார்:குன்றத்துார் அருகே, சோமங்கலம் கிராமத்தில், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கண்ணபிரான் பஜனை கோவில் அமைந்துள்ளது. இந்தாண்டு உறியடி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. கண்ணபிரான் பெருமாள் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள் செய்த பலர் உறியடித்தனர். இரவு வீதியுலா சென்று கண்ணபிரான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.