உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் பணிமனைக்கு துாய்மைக்கான விருது

உத்திரமேரூர் பணிமனைக்கு துாய்மைக்கான விருது

உத்திரமேரூர்:விழுப்புரத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில், உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனைக்கு துாய்மைக்கான விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில் வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை என ஆறு மண்டலங்கள் உள்ளன. இந்த ஆறு மண்டலங்களில் உள்ள 59 பணிமனைகளில், மண்டலம் வாரியாக சிறந்த துாய்மைக்கான பணிமனை தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, விழுப்புரம் கோட்ட அலுவ லகத்தில், கோட்ட மேலான் இயக்குநர் குணசேகரன் தலைமையில் நடந்தது. அதில், காஞ்சிபுரம் மண்டலத்தில் சிறந்த துாய்மைப் பணிக்கான விருது உத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனைக்கு வழங்கப் பட்டது. இந்த விழாவில், காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, உத்திரமேரூர் பணிமனை மேலாளர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை