உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  நெமிலி கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா

 நெமிலி கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா

நெமிலி: நெமிலி சீனிவாசப் பெருமாள் கோவிலில், நாளை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பகுதியில், சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறும். நட ப் பாண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாளை, காலை 4:30 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, காலை 6:00 மணி அளவில், சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரத்திற்கு பின் சீனிவாசப் பெருமாள் வீதியுலா செல்ல உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை