உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஐப்பசி கிருத்திகை விழாவில் வல்லக்கோட்டை முருகன்

ஐப்பசி கிருத்திகை விழாவில் வல்லக்கோட்டை முருகன்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஏழு அடி உயரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இங்கு, ஐப்பசி கிருத்திகை விழாவை முன்னிட்டு, நேற்று, மூலவர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு, பாலாபிஷேகம் நடந்தது. சஷ்டி மண்டபத்தில் உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த, ஏராளமான பக்தர்கள் முருகப் பெருமானை வழிபட்டனர்.பக்தர்களுக்கு மோர், அன்னதானம் உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் வழக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ