உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரதராஜபுரம் சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம்

வரதராஜபுரம் சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம்

அவளூர்:காஞ்சிபுரம் ஒன்றியம், குருவிமலை, களக்காட்டூர், காலுார், விச்சந்தாங்கல், பெரியநத்தம், ஆசூர், கொளத்துார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், வரதராஜபுரம் வழியாக அவளூர், வாலாஜாபாத், இளையனார்வேலுார் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர்.இதில், வரதராஜபுரம் சாலை வளைவில், மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வளைவில் திரும்பும்போது, பள்ளத்தில் நிலைதடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், வரதராஜபுரத்தில் சேதமடைந்த சாலையை, சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை