மேலும் செய்திகள்
வரதராஜர் வனபோஜன உற்சவம் களக்காட்டூரில் விமரிசை
31-Jan-2025
வையாவூர்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ராஜகுளம் கிராமம் உள்ளது. இங்குள்ள ராஜகுளத்தில், ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமி தினத்தன்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளும் ராஜகுளம் தெப்போற்சவம் நடைபெறும்.இதில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், ராஜகுளத்தில் உலா வருவார். அதன்படி, நடப்பாண்டு தெப்போற்சவம், வரும் மார்ச் 14ம் தேதி மாலை 6:30 மணிக்கு நடைபெற உள்ளது.தெப்போற்சவத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அதிகாலை 4:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியருடன் கோவிலில் இருந்து புறப்பட்டு, நத்தப்பேட்டை, வையாவூர், கவுரியம்மன்பேட்டை வழியாக ராஜகுளம் வந்தடைவார்.மாலை 6:30 மணிக்கு தெப்போற்சவம் நடைபெறும். இதில், காஞ்சிபுரத்தில் இருந்து ராஜகுளம் செல்லும் வழியில் உள்ள வையாவூரில் வரதராஜ பெருமாள் எழுந்தருளும் கல்மண்டபத்தை, நல்லுார் மண்டபம் என அப்பகுதியினர் அழைக்கின்றனர்.பழமையான இம்மண்டபத்தை முறையாக பராமரிக்காததால், மண்டபத்தின் கூரையில் செடி, கொடிகள் வளர்ந்தும், விரிசல் ஏற்பட்டும் மண்டபம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.எனவே, வரதராஜ பெருமாள் ராஜகுளம் தெப்போற்வம் நடைபெறுவதற்கு முன், வையாவூரில் உள்ள நல்லுார் கல்மண்டபத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
31-Jan-2025