உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வசந்த உத்சவம் நாளை நிறைவு வரதர் குதிரை வாகனத்தில் உலா

வசந்த உத்சவம் நாளை நிறைவு வரதர் குதிரை வாகனத்தில் உலா

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு நாட்கள் நடைபெறும் வசந்த உத்சவம், கடந்த 24ம் தேதி துவங்கியது. உத்சவத்தையொட்டி, தினமும் காலையில் கண்ணாடி அறையில் எழுந்தருளும் பெருமாளுக்கு விசேஷ பூஜை நடந்து வருகிறது. மாலை 6:00 மணியளவில், கண்ணாடி அறையில் இருந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள் வெவ்வேறு மலர் அலங்காரத்தில், சன்னிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சன்னிதியில் எழுந்தருள்கிறார்.அங்கிருந்து புறப்பாடாகி, கோவிலில் உள்ள அத்தி வரதர் மண்டபம் என, அழைக்கப்படும் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு திருவாராதனம் உள்ளிட்ட பூஜை நடந்து வருகிறது. இதில், ஆறு நாட்களும் தினமும் பல்வேறு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்வசந்த உத்சவம் நிறைவு நாளான நாளை, காலை 11:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து வரதராஜ பெருமாள் புறப்பாடாகி, வசந்த மண்டபம் வந்தடைகிறார். அங்கு சிறப்பு திருமஞ்சனமும், பக்தர்கள் பொது தரிசனமும் நடைபெறும். மாலை 6:00 மணியளவில், குதிரை வாகனத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், மாட வீதிகளில் உலா வருகிறார்.நிறைவாக, அனந்தசரஸ் குளத்தில் ஸ்ரீசடாரி தீர்த்தவாரி உத்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை