உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூரில் வி.சி.,க்கள் சாலை மறியல்

உத்திரமேரூரில் வி.சி.,க்கள் சாலை மறியல்

உத்திரமேரூர்:உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது, வக்கீல் ஒருவர் செருப்பு வீச முயன்ற சம்பவத்தை கண்டித்து, வி.சி., சார்பில் உத்திரமேரூர் பஜார் வீதியில் நேற்று சாலை மறியல் நடந்தது. மாவட்ட செயலர் எழிலரசு தலைமையில், மாவட்ட நிர்வாகி அறிவழகன், நகர செயலர் முருகன், ஒன்றிய செயலர் வின்சென்ட் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மறியலில் பங்கேற்றனர். உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் பேச்சு நடத்தியதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை