உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தரைப்பாலத்திற்கு தடுப்பு இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

தரைப்பாலத்திற்கு தடுப்பு இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:ஒரத்துாரில் தரைப்பாலத்திற்கு தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என மக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வண்டலுார்- -- வாலாஜாபாத் சாலையில், படப்பையில் இருந்து, ஒரத்துார் சாலை செல்கிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த சாலை வழியே, படப்பை, தாம்பரம், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலையில், அம்மனம்பாக்கம் சந்திப்பு அருகே உள்ள தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு இல்லாமல் உள்ளது. இதனால், தரைப்பாலத்தின் மீது செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வானங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, நிலைதடுமாறி கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.அதேபோல, அவ்வழியாக செல்லும் தனியார் பள்ளி பேருந்துகள், தடுப்பு இல்லாத தரைப்பாலத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றன.எனவே, ஒரத்துார் சாலையில் உள்ள தரைப்பாலத்திற்கு தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ