மேலும் செய்திகள்
இளையனார் வேலுார் சாலை அகலப்படுத்த வலியுறுத்தல்
09-Jan-2025
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் அடுத்த தம்மனுார் கிராமத்தில் இருந்து, கண்ணடியன் குடிசை கிராமம் வழியாக, வாலாஜாபாத் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது.இந்த சாலை வழியாக,காவாந்தண்டலம், கணபதிபுரம், தம்மனுார், இளையனார் வேலுார் ஆகிய பகுதி வாசிகள், வாலாஜாபாத் பகுதிக்கும், வாலாஜாபாத், அவளூர், அங்கம்பாக்கம் ஆகிய கிராமவாசிகள் கண்ணடியான்குடிசை,தம்மனுார், இளையனார்வேலுார் பகுதிக்கும் சென்று வருகின்றனர்.இந்த சாலை வழியாக, ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு, டிப்பர் லாரிகள்செல்கின்றன.அதிக அளவில் பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் இருந்து, ஜல்லிக்கற்கள் சிதறி, சாலை மற்றும் வளைவுகளில் கொட்டிக்கிடக்கின்றன.இதுபோன்ற வளைவில் செல்லும் வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது என, சிறிய வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.எனவே, ஓவர் லோடு வாகனங்களை கண்காணிக்க, சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள்வலியுறுத்தியுள்ளனர்.
09-Jan-2025