உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கட்டட வசதியில்லாத கால்நடை மருந்தகம்

கட்டட வசதியில்லாத கால்நடை மருந்தகம்

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது புத்தகரம் கிராமம். இங்கு கால்நடை மருந்தகம் செயல்படுகிறது. இந்த கால்நடை மருந்தகத்தில் போதுமான இடவசதி இல்லாத நிலை உள்ளது. இதனால், கால்நடைகளுக்கு மருந்துகள் பெற வரும் கால்நடை பராமரிப்போர் பலரும் சிரமபடுகின்றனர். சிகிச்சைக்கு அழைத்து வரப்படும் ஆடு, மாடு, நாய் போன்றவற்றை திறந்த வெளியில் வைத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, புத்தகரம் கால்நடை மருந்தகத்திற்கு கூடுதல் கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், கால்நடைகள் மற்றும் கால்நடைகளை அழைத்து வருவோர் வசதிக்காக காத்திருப்பு அறை அமைக்க வேண்டும். கால்நடை மருந்தகத்திற்கு சுற்றுசுவர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதி வாசிகள் மற்றும் கால்நடை பராமரிப்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி