சாய்ந்த மின் கம்பங்கள் கிராமவாசிகள் அச்சம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில், பெரியகரும்பூர் காலனி கிராமம் உள்ளது. செம்பரம்பாக்கம் - கூரம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் இருந்து, பெரிய கரும்பூர் காலனிக்கு செல்லும் சிமென்ட் சாலையோரம் மின்மாற்றி மற்றும் மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின் கம்பங்கள் சேதமடைந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், மின் வழித்தடத்தை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. பருவமழை காலங்களில், பலத்த காற்று வீசினால், மின்கம்பங்கள் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.