மேலும் செய்திகள்
டி.ஐ.ஜி., மாற்றம்
26-Mar-2025
வாலாஜாபாத்:வாலாஜாபாத் தாசில்தாராக இருந்த கருணாகரன், சில மாதங்களுக்கு முன், ஸ்ரீபெரும்புதுார் தாலுக்கா, ஒரகடம் சிப்காட் சிறப்பு தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, வாலாஜாபாத் தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த மலர்விழி, வாலாஜாபாத் தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், பரந்துாரில் அமைய உள்ள விமான நிலையத்திற்கான நில எடுப்பு தனி தாசில்தாராக மலர்விழி, தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் தாசில்தாராக இருந்த மோகன் குமார், வாலாஜாபாத் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நேற்று, வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
26-Mar-2025