உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் வெளியேற வழியில்லாத வாலாஜாபாத் தாலுக்கா அலுவலக வளாகம்

மழைநீர் வெளியேற வழியில்லாத வாலாஜாபாத் தாலுக்கா அலுவலக வளாகம்

வாலாஜாபாத்,:வாலாஜாபாத்- -- ஒரகடம் சாலையில், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே தாசில்தார் அலுவலகம் இயங்குகிறது. இந்த அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வளாகம், மழைநீர் வெளியேற வசதி இல்லாமல் தாழ்வாக உள்ளது.இதனால், மழைக்காலங்களில் இத்தாலுக்கா அலுவலக வளாகத்தில் தொடர்ந்து மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவது வழக்கமாக உள்ளது.இந்நிலையில், நேற்று, மதியம் 1:00 மணியளவில் வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது.அப்போது, வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகம் செல்லும் வழி நீரில் மூழ்கியது. இதனால்,அலுவலகத்திற்கு உள்ளே சென்று வரும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முழங்கால் வரை தேங்கும் மழைநீரில் நடந்து மிகவும் அவதிக்குள்ளாகினர்.மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் இத்தகைய சிரமம் ஏற்படுவதாக புலம்பிய அப்பகுதியினர், அலுவலக வளாகத்தில் மழைநீர் தேங்காமல் வெளியேறும் வகையிலான வழி வகை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி