வாலாஜாபாத் ஒன்றிய கூட்டம்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், வாலாஜாபாத் பி.டி.ஓ., அலுவலகலத்தில் நேற்று நடந்தது.வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன் தலைமையில் கூட்டத்தில், துணை தலைவர் சேகர் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு, பொது நிதியின் கீழ் பணிகள் தேர்வு செய்வது குறித்து தீர்மானிக்கப்பட்டது. கோடைக்காலம் துவங்க உள்ளதால், கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் தவிர்க்க, அந்தந்த கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்தலுக்கான முன் எச்சரிக்கை பணிகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில், சாலை, தெருவிளக்கு மற்றும் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்ததுல் உள்ளிட்டவை குறித்து கவுன்சிலர்கள் கோரினர். கோரிக்கைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் காஞ்சனா தெரிவித்தார்.