உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிநீர் குழாயில் வால்வு பழுது கீழ்கதிர்பூரில் வீணாகும் தண்ணீர்

குடிநீர் குழாயில் வால்வு பழுது கீழ்கதிர்பூரில் வீணாகும் தண்ணீர்

கீழ்கதிர்பூர்:காஞ்சிபுரம் ஒன்றியம் கீழ்கதிர்பூர் ஊராட்சி, காலனி அருகே 10,000 லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்படும் குடிநீர், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் திறந்து விடும் ‛கேட் வால்வில்' பழுது ஏற்பட்டு, தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதோடு, நீண்டநேரம் மின்மோட்டார் இயங்குவதால், மின்சாரமும் விரயமாவதுடன், மின்கட்டணமும் அதிகரிக்கும் நிலை உள்ளது.எனவே, குடிநீர் வீணாவதை தடுக்கும் வகையில், பழுதடைந்த ‛கேட் வால்வை' சீரமைக்க, கீழ்கதிர்பூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ