மேலும் செய்திகள்
கால்வாயில் அடைப்பால் கழிவுநீர் தேக்கம்
25-Sep-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின் நகர் நேதாஜி 4வது தெருவில், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், கால்வாயில் மண் திட்டுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், கழிவுநீர் வெளியேற வழியின்றி மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் குளம்போல தேங்கியுள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் பாதசாரிகள் சகதியாக மாறிய மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.மழை விட்டு ஐந்து நாளாகியும், தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்களால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, மின் நகர் நேதாஜி 4வது தெருவில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்கவும் கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
25-Sep-2024