மின் மோட்டார் பழுதால் வீணாகும் குடிநீர் தொட்டி
காஞ்சிபுரம் மாநகராட்சி, பவளவண்ணார் தெருவாசிகளின் கூடுதல் குடிநீர் தேவைக்காக, மாநகராட்சி சார்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிறு மின்விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்கான ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது.பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குடிநீர் தொட்டி பயன்பாடின்றி வீணாகி வருகிறது.எனவே, மின் மோட்டாரை பழுது நீக்கி, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கணேசன்,காஞ்சிபுரம்.