உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரியில் புதர் மண்டி கிடக்கும் செடிகளால் நீர் பாய்ச்சுவதில் சிக்கல் 

ஏரியில் புதர் மண்டி கிடக்கும் செடிகளால் நீர் பாய்ச்சுவதில் சிக்கல் 

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், நீர் வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன.தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவ மழைகளுக்கு, நீர் வள ஆதாரத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிகள் நிரம்பினால், 50,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.தென்மேற்கு பருவ மழையால், வளத்துார், பரந்துார், தென்னேரி உள்ளிட்ட சில ஏரிகளில், தண்ணீர் இருப்பு உள்ளன. குறைந்த தண்ணீர் இருப்பு இருக்கும் ஏரிகளில், ஆளுயரத்திற்கு நாணல் மற்றும் செடிகள் புதர் மண்டிக் கிடக்கின்றன.குறிப்பாக, விஷ கண்டிகுப்பம் ஏரியில், ஆளுயரத்திற்கு செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்படும். மேலும், ஆளுயர செடிகளால், ஏரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் உருவாகும் நிலை உள்ளது.எனவே, வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன், ஏரியில் புதர் மண்டிக் கிடக்கும் செடிகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ