உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்புச்சுவர் இல்லாத கிணறு அழகூரில் விபத்து அபாயம்

தடுப்புச்சுவர் இல்லாத கிணறு அழகூரில் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் மாகாணியம் ஊராட்சியில் அழகூர் கிராமம் உள்ளது. இங்கிருந்து மாகாணியம் வழியே படப்பை, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராமானோர் கார், இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில், அழகூர் பகுதியில் சாலையோரம் தனியாருக்கு செந்தமான இரண்டு கிணறு உள்ளது. சாலையோரம் தடுப்புச்சுவர் இல்லாம் உள்ள கிணற்றால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.இரவு நேரங்களில் இந்த வழியாக அதிவேகமாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்தால், கிணற்றில் விழுந்து உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.அதேபோல், காலை - மாலை நேரங்களில் இவ்வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள், விளையாட்டாக கிணறு அருகே வரும் போது, தவறி விழும் சூழல் உள்ளது. ஆடு, மாடுகள் இந்த கிணற்றோரம் உள்ள புற்களை மேய்வதற்கு சுற்றி திரிகின்றன.அப்போது, தவறி உள்ளே விழும் அபாயம் உள்ளது. 'குடி'மகன்கள் கிணற்று அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.எனவே, உயிர்பலி ஏற்படும் முன், கிணற்றுக்கு உடனடியாக தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ