உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதர் மண்டிய வடிகால்வாய் சீரமைப்பது  எப்போது?

புதர் மண்டிய வடிகால்வாய் சீரமைப்பது  எப்போது?

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம்,பெருநகர் கிராமத்தில், பூமா செட்டிகுளம் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இந்த கால்வாய், சில ஆண்டுக்கு முன் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது.கடந்த 2019- - 20ம் நிதி ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 5 லட்சத்து 81,000 ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. தற்போது, கால்வாய் பராமரிப்பு இல்லாததால், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது.இதனால் நீரானது, தடையின்றி செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. புதர் மண்டிய கால்வாயை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் இருந்து வருகிறது. எனவே, மழைநீர் வடிகால்வாயை,சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை