உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர் மீண்டும் கட்டுவது எப்போது?

இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர் மீண்டும் கட்டுவது எப்போது?

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் நெய்யாடுபாக்கம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடந்தது. அப்போது, அதற்கு தேவையான கட்டுமான பொருட்களை பள்ளி வளாகத்தில் வைக்க, சுற்றுச்சுவர் தடையாக இருந்தது.பின், சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை இடித்து, கட்டுமான பொருட்களை உள்ளே வைக்கப்பட்டு, கட்டுமான பணியும் முடிக்கப்பட்டது. தற்போது, இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்படாமல் உள்ளது.இதனால், இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் பள்ளி வளாகத்தை மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். பின், மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். எனவே, பள்ளியில் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை, மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை