உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திறந்தநிலை கிணற்றுக்கு தடுப்பு ஏற்படுத்துவது எப்போது?

திறந்தநிலை கிணற்றுக்கு தடுப்பு ஏற்படுத்துவது எப்போது?

உத்திரமேரூர்,:உத்திரமேரூர் அடுத்த, ஆதவப்பாக்கம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளின் மத்தியில் திறந்தநிலை கிணறு உள்ளது. இந்த திறந்தநிலை கிணற்று தண்ணீரை கிராமத்தினர் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.சில ஆண்டுகளுக்கு முன், திறந்தநிலை கிணற்றில் நீராதாரம் வற்றி,பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. குடியிருப்புகளில் உள்ள சிறுவர்கள் அவ்வப்போது கிணற்றின் அருகே விளையாடி வருகின்றனர்.திறந்தநிலை கிணற்றின் மீது தடுப்புகள் இல்லாததால், சிறுவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்கள் கிணற்றின் மீது தடுப்பு ஏற்படுத்த நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இருப்பினும் ஊராட்சி நிர்வாகம் கிணற்றின் மீது தடுப்பு ஏற்படுத்தாமல் உள்ளது. எனவே திறந்தநிலை கிணற்றின் மீது தடுப்பு ஏற்படுத்த அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !