உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதிய சார் -- பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு எப்போது?

புதிய சார் -- பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு எப்போது?

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்பதுாரில் 1.88 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட சார்- --பதிவாளர் அலுவலகம் கட்டுமான பணிகள் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், திருவள்ளூர் சாலையில் ஸ்ரீபெரும்புதுார் சார்- - பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்தது. அந்த அலுவலக கட்டடம் சேதமடைந்ததை அடுத்து, 1.85 கோடி ரூபாய் மதிப்பில், புதிய சார் - - பாதிவாளர் அலுவலகம் கட்டடம் கட்டும் பணி, கடந்த ஆண்டு பிப்., மாதம் துவங்கியது.இதனால், ஸ்ரீபெரும்புதுார் சார் - பதிவாளர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட திருமங்கையாழ்வார் சாலையில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.மூன்று தளங்களை கொண்ட புதிய சார் -- பதிவாளர் அலுவகத்தின் கட்டுமான பணிகள், கடந்த நவ., மாதம் நிறைவு பெற்றது. இரண்டு மாதங்கள் ஆன நிலையில் புதிய கட்டடம் திறக்கப்படமால் உள்ளது. எனவே, புதிய சார் -- பதிவாளர் அலுவலகத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை