உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாழ்வாக செல்லும் மின் ஒயர்களுக்கு சவுக்கு கட்டையால் தடுப்பு அமைப்பு

தாழ்வாக செல்லும் மின் ஒயர்களுக்கு சவுக்கு கட்டையால் தடுப்பு அமைப்பு

காஞ்சிபுரம்;ஏனாத்துார் அருகே, தாழ்வாக செல்லும் மின் ஒயர்களுக்கு, சவுக்கு கட்டையால் முட்டுக் கொடுத்து துாக்கி கட்டி உள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில் இருந்து, மருதம் கிராமம் வழியாக, தென்னேரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலை, முதல்வர் சாலைகள் மேம்பாடு திட்டத்தில், சமீபத்தில் தார் சாலையாக செப்பணிடப்பட்டது. இந்த கிராம சாலை வழியாக, ஒழையூர், கரூர், ராஜகுளம் கிராம மக்கள் தென்னேரி கிராமத்திற்கு செல்வதற்கு, மருதம் கிராமம் வழியாக செல்கின்றனர். இதில், ஏனாத்துார் காலனி சுடுகாடு அருகே, மின் ஒயர் தாழ்வாக செல்கிறது. இதனால், ஏனாத்துார் - தென்னேரி சாலையில் இருந்து, ஸ்ரீவாரி நகரில் கட்டப்படும் அரசு குடியிருப்புகளுக்கு சிமென்ட், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது. இருப்பினும், கட்டு மானப் பொருட்களை எடுத்து செல்ல, தற்காலிகமாக சவுக்கு கட்டை முட்டுக் கொடுத்து, தாழ்வாக தொங்கும் மின் ஒயரை துாக்கி நிறுத்தி உள்ளனர். எனவே, தாழ்வாக செல்லும் மின் ஒயரை உயர்த்தி கட்ட வேண்டும் என, கிராம மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை