உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பு கம்பி இல்லாத பரந்துார் சாலை வளைவு

தடுப்பு கம்பி இல்லாத பரந்துார் சாலை வளைவு

காஞ்சிபுரம்:பள்ளூர் - சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., துாரம் ஒருவழிச் சாலை இருந்தது. இச்சாலையில், வாகனப் போக்குவரத்து அதிகரித்து இருப்பதால், மேம்படுத்தப்பட்ட இருவழி சாலையாக, விரிவுப்படுத்தும் பணி, 2021ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் துவங்கியது.ஏழு மீட்டர் சாலையில் இருந்து, 10.5 மீட்டராக மேம்படுத்தப்பட்ட இருவழிச் சாலைக்கு, 44 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவுபடுத்தும் பணி கடந்த ஆண்டு நிறைவு பெற்று, வாகன போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.இந்த சாலை வளைவுகளில், தடுப்பு கம்பி இல்லாததால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி சாலையோர பள்ளத்தில் கவிழந்து வாகன விபத்து ஏற்பட்டு வந்தன.இதை தவிர்க்கும் வகையில், பரந்துார் - -கம்மவார்பாளையம் சாலையோரம் இரும்பிலான தடுப்பு கம்பிகளை அமைத்துள்ளனர். காட்டுப்பட்டூர் - -பரந்துார் இணைப்பு சாலையோரம் தடுப்பி கம்பி அமைக்காமல் உள்ளனர்.அங்கு, இரும்பிலான தடுப்பு கம்பிகளை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ