மேலும் செய்திகள்
ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் அவதி
11-Sep-2024
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன.தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவ மழைகளுக்கு, நீர்வள ஆதாரத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிகள் நிரம்பினால், 50,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.தென் மேற்கு பருவ மழையால், வளத்துார், பரந்துார், தென்னேரி உள்ளிட்ட சில ஏரிகளில், தண்ணீர் இருப்பு உள்ளன. தண்ணீர் இருக்கும் ஏரிகளில், ஆளுயரத்திற்கு நாணல் மற்றும் பசுமை செடிகள் புதர் மண்டிக் கிடக்கின்றன.குறிப்பாக, வளத்துார், விஷ கண்டிகுப்பம் ஏரிகளில், ஆளுயரத்திற்கு செடிகள் வளர்ந்துள்ளன. மேயச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்க ஏரிக்குள் இறங்கினால், செடிகளில் சிக்கி இறக்கும் அபாயம் உள்ளன.எனவே, வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன், ஏரியில் புதர் மண்டிக் கிடக்கும் செடிகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் நீர்வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏரியில் வளர்ந்துள்ள செடிகள் நீர் மட்டம் உயரும் போது, நீரில் மூழ்கி அழுகிவிடும். இருப்பினும், நீர்பாசன சங்க தேர்தல் முடிந்ததும், கோடை காலத்தில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
11-Sep-2024