உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அமைச்சர் குறைதீர் கூட்டம் இனி நடக்குமா? அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நீடிப்பு

அமைச்சர் குறைதீர் கூட்டம் இனி நடக்குமா? அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நீடிப்பு

காஞ்சிபுரம்:தி.மு.க., அரசு கடந்த 2021ல் பொறுப்பேற்றது முதல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரு மாவட்டங்களுக்கும் சேர்த்து அமைச்சர் அன்பரசன் பொறுப்பு வகித்து வந்தார்.காஞ்சிபுரம் தி.மு.க., வடக்கு மாவட்ட செயலரான இவர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என இரு மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் பற்றி, அடிக்கடி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வந்தார்.இந்நிலையில், தமிழகம் முழுதும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், 13 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மழை மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வது, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வது என, தன் பணிகளை காஞ்சிபுரம் மாவட்டத்தில், அமைச்சர் காந்தி துவக்கிவிட்டார்.இந்நிலையில், காஞ்சிபுரத்தில் அமைச்சர் அன்பரசன், மாதம் இருமுறை நடத்தி வரும் குறைதீர் கூட்டம் அடுத்து வரும் வாரங்களில் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி தெளிவான பதில்கள், கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடமும் இல்லை.அதேபோல், அமைச்சர் அன்பரசனின் வடக்கு மாவட்ட பகுதிகளான, ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், படப்பை உள்ளிட்ட இடங்களில், அமைச்சர் காந்தி ஆய்வு செய்வாரா என கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை