இடையூறான மின் கம்பம் இடமாற்றம் செய்யப்படுமா?
காஞ்சிபுரம் மிலிட்டரி சாலையில் இருந்து ஓரிக்கை பாலாறு உயர்மட்டப் பாலம் வழியாக, உத்திரமேரூர் செல்லும் வாகன ஓட்டிகள், சின்னய்யன்குளம் பிரதான சாலை வழியாக சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், சாலையோர விளம்பில் போடப்படும் வெள்ளை நிற கோட்டிற்கு உட்பகுதியில் மின் கம்பம் உள்ளது.இதனால், இச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், அந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை, வெள்ளை கோட்டிற்கு வெளியே இடமாற்றம் செய்ய, மின் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.ராஜன்,காஞ்சிபுரம்.