உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அங்கன்வாடியில் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகள் அகற்றப்படுமா?

அங்கன்வாடியில் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகள் அகற்றப்படுமா?

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில் உள்ள அங்கன்வாடி மைய வளாகத்தை முறையாக பராமரிக்காததால், பார்த்தீனியம் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.இச்செடிகளால், மனிதர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு தோல் அரிப்பு, கொப்புளம், கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா ஏற்படுவதோடு, கால்நடைகள் இச்செடியை உண்டால், குடல்புண், ஒவ்வாமை, பசியின்மை மற்றும் எடை குறைதல் போன்ற பல்வேறு பிரச்னை ஏற்படும் என, கூறப்படுகிறது.இதனால், அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கும், அருகில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் பார்த்தீனியம் செடிகளால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, களக்காட்டூர் அங்கன்வாடி மைய வளாகத்தில் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளை, வேருடன் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி