உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாலுகா அலுவலகம் சீரமைக்கப்படுமா?

தாலுகா அலுவலகம் சீரமைக்கப்படுமா?

உத்திரமேரூர்:சேதமடைந்துள்ள உத்திரமேரூர் தாலுகா அலுவலக கட்டடத்தை, சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூரில் உள்ள வந்தவாசி சாலையில், தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார 73 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு பணிகளுக்காக தினமும் வந்து செல்கின்றனர்.இந்த அலுவலக கட்டடம் மூன்று தளங்களை கொண்டது. இதில், தரை தளத்தில் வட்ட வழங்கல் அலுவலர், இ- - சேவை மைய அறைகளும், முதல் தளத்தில் தாசில்தார், தேர்தல் பிரிவு அறைகளும், இரண்டாவது தளத்தில் நில அளவையர் அறைகளும் இயங்கி வருகிறது.தற்போது, தாலுகா அலுவலக கட்டடம் முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. அதில், இரண்டாவது தளத்தில் உள்ள கட்டட சுவர் இடிந்து நிலையில் உள்ளது.அதிலிருந்து கான்கிரீட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. சேதமடைந்து வரும் கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழல் உள்ளது.இதனால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும், மழை நேரங்களில் சுவரில் தண்ணீர் ஊறி கட்டடம் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது.எனவே, சேதமடைந்துள்ள தாலுகா அலுவலக கட்டடத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி