குட்கா விற்ற பெண் கைது
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் உள்ள பெட்டி கடை, டீ கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, பொன்னேரிக்கரை போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அங்குள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது, கற்பகம் என்பவர் நடத்தி வந்த டீ கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.போலீசார் சோதனையில், கடையில் இருந்து 3.1 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கற்பகம், 40. என்பவரை போலீசார் கைது செய்தனர்.